This is ஔவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்.
The meaning of this runs very very deep and it is simply NOT a chant. My grandfather used to advocate this as a chant to many people who blindly did reiterate this during their every day worship, but did not even put the least of effort to understand this. My mother was one such person and she did not start to understand the meaning till the last few days, until when I started to explain her some old concepts of India and its rational perspective. The problems of people disappear not because of mystical powers of God when he is pleased by his worshiper iterating this during his / her everyday worship, but by understanding the meaning and use it as a method to destroy the obstacles that arise in their life. It was she who helped me give a partial explanation to this poem, which she started understand only lately.
It must be given its due analysis being written by a very famous தமிழ் scholar ஔவையார். Though she was a great patron of விநாயகர், it is important for us to understand the depths of the meaning conveyed in the poem. It is also important to understand that the Indian Gods were nothing but personification of some concept, who needn't have any mystical powers (anything more than people can imagine) but each was and embodiment on particular concept. In such a sense and Lord விநாயகர் was none but the personification of "Remover of Obstacles", because he was an embodiment of knowledge and with knowledge one can reason out and destroy the obstacles in their path. Though at instances it is very spiritual or esotoric, it might not be when the real meaning of it is understood. I having understood only half due to my poor knowledge of தமிழ் and with a little help from my mother, I am sure many who read this try to start the process of understanding the meaning and certain processes associated with what is explained in the below poem.
சீதக்களப செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பும் பலயிசைப் பாட
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடிவாகி குவலயம் தன்னில்
திருவடி வைத்து திறம் இது பொருளெனெ
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத்தால் கொடுவினைக் களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறுக் கருணையில் இனிதெனக் கருளி
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலம் ஒரு நான்கும் தந்தெனக் கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக்கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத் தங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்தி
குண்டலி யதனிற் கூடிய அசபையின்
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்ச்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முகச் சூட்சமும்
எண்முக மாகி இனிதெனக்கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப்படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னையறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டின் ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்தை அழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிக் காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவினுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்
சூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக்கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயகா விரைகழல் சரணே !

No comments:
Post a Comment